சிட்னி டெஸ்ட்: பிராட்மேன் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
- முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்தார். ஹாரி புரூக் 84 ரன்கள் எடுத்தார்.
சிட்னி:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 97.3 ஓவரில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்தார். ஹாரி புரூக் 84 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி பொறுப்புடன் விளையாடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 518 ரன்களை குவித்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து 129 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனை ஸ்மித் முந்தினார்.
இங்கிலாந்துக்கு எதிராக பிராட்மேன் 5,028 ரன்களை எடுத்துள்ள நிலையில், ஸ்டீவன் ஸ்மித் 5,085 ரன்களை எடுத்துள்ளார்.