VIDEO: இங்கிலாந்து வீரர் கிராலியிடம் சீறிய சுப்மன் கில் - சமாதானப்படுத்திய டக்கெட்
- நேற்றைய நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்தார்.
- பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார்.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.
இதனிடையே நேற்றைய நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார். போட்டியின் கடைசி நிமிடங்களில் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்து 3 ஆம் நாளில் பேட்டிங் செய்யாமல் தவிர்க்க கிராலி வேண்டுமென்றே பிசியோவை கூப்பிடுவதாக சுப்மன் கில் கோபமடைந்தார். ரிட்டையர்ட் அவுட் முறையில் கிராலி வெளியேறுவதாக கில் சைகை செய்து கிண்டல் செய்தார். இதனால் கிராலி - கில் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட பென் டக்கெட் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.