கிரிக்கெட் (Cricket)

இந்தியா 'ஏ' அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல்

Published On 2025-09-23 15:39 IST   |   Update On 2025-09-23 15:39:00 IST
  • ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று லக்னோவில் தொடங்கியது.
  • இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார்.

லக்னோ:

இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் இரு அணிகளிக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார்.

அவர் அணியை விட்டு வெளியேறி மும்பை திரும்பினார். இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News