கிரிக்கெட் (Cricket)

21 முறை டக் அவுட்டானால் மட்டும் தான்... கவுதம் கம்பீர் குறித்து பேசிய சஞ்சு சாம்சன்

Published On 2025-08-10 16:23 IST   |   Update On 2025-08-10 16:23:00 IST
  • சிறப்பான திறமை இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை
  • கம்பீர் கூறிய வார்த்தைகள் என் தன்னம்பிக்கையை அதிகமாக்கியது

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இதுவரை அவர் 50 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சிறப்பான திறமை இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், "நான் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக்அவுட்டான பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் நான் மனச்சோர்வுடன் அமர்ந்திருந்தேன். அதைக் கவனித்த கவுதம் கம்பீர், என்ன நடந்தது? என்று கேட்டார்.

நான் அவரிடம் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் இரண்டிலும் ரன் அடிக்காமல் கோட்டைவிட்டுவிட்டேன் என்று கூறினேன் அதற்கு அவர், 'அதனால் என்ன? நீங்கள் 21 முறை டக்-அவுட்டானால் மட்டும் தான் நான் உங்களை அணியிலிருந்து நீக்குவேன்' என்று கூறினார். அவரின் வார்த்தைகள் என் தன்னம்பிக்கையை அதிகமாக்கியது" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News