கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் சாய் சுதர்சன்- அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு

Published On 2025-05-23 15:44 IST   |   Update On 2025-05-23 15:44:00 IST
  • இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது சமி இடம்பெற மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்து தொடர் நடைபெற உள்ள நிலையில் இருவரும் ஓய்வு பெற்றதால் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக யார் நியமிக்கப்படுவார். அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கேப்டன் பதவிக்கு சுப்மன் கில், பும்ரா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்று நிருபர்களை சந்திக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 16 முதல் 17 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதற்கிடையே வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, இங்கிலாந்து தொடரில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்திருந்தாலும் நீண்ட நேரம் பந்து வீசும் அளவுக்கு அவர் முழுமையாக குணமடையவில்லை என்றும், எனவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது சமி இடம்பெற மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News