அறிமுக டெஸ்டில் சாய் சுதர்சன் டக் அவுட்- உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்பு
- முதல்நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது.
- கேஎல் ராகுல் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். அவ்வபோது இருவரும் பவுண்டரிகளை பறக்க விட்டனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 41 ரன்கள் எடுத்த போது பவுண்டரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் தொடக்க முதலே பதட்டத்துடன் காணப்பட்ட அவர் டக் அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
அவருக்காக 2 வீரர்களை லேக் சிலிப்பில் வைக்கப்பட்டிருந்தது. அதே திசையில் ஸ்டோக்ஸ் பந்தை வீசினார். கிட்டதட்ட அந்த பால் வைடு போல சென்றது. அந்த பந்தை அடிக்க முற்பட்டு அவர் ஆட்டமிழந்தார். இதனால் முதல்நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது.