ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டி சிறப்பு பூஜை
- இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது.
- பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டி உத்தரபிரதேச மாநிலத்தில் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.