யார் பந்து வீச்சாளராக விரும்புவார்கள்?- எட்ஜ்பாஸ்டன் ஆடுகளத்தை விமர்சித்த பேட் கம்மின்ஸ்
- ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமாக இருந்தது.
- வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என எதற்கும் ஒத்துழைக்கவில்லை.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. என்ற போதிலும் இங்கிலாந்து ஆடுகளத்திற்குரிய ஸ்விங் மிகப்பெரிய அளவில் இல்லை. பேட்டிங்கிற்கு சொர்க்கமாக இருந்தது.
பேஸ்பால் எனச் சொல்லிக் கொண்டு ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-
இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச்சாளராக விரும்புவார்கள். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இது 3ஆவது மிகவும் மோசமான பிளாட் பிட்ச்.
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியை இந்தியா- இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன் போட்டியுடன் ஒப்பிடும்போது இரண்டு வேறுபட்ட விளையாட்டாக தெரிகிறது. இந்தியா- இங்கிலாந்து தொடர் நல்லத் தொடராக செல்லும் போன்று தெரிகிறது. தற்போது 1-1 என இருக்கிறது. அதிக அளவில் போட்டியை பார்க்கவில்லை. இருந்தபோதிலும் ஸ்கோர் பார்த்தேன்.
இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.