கிரிக்கெட் (Cricket)

டிராவிஸ் ஹெட் சைகைக்கு அர்த்தம் இதுதான் - பேட் கம்மின்ஸ் விளக்கம்

Published On 2024-12-31 12:47 IST   |   Update On 2024-12-31 12:47:00 IST
  • ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை.
  • சைகை காண்பித்து வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் பண்ட் ஆட்டமிழந்தார். அப்போது டிராவிஸ் ஹெட் தனது கைகளுக்குள் விரலை நுழைப்பது போல் சைகை காண்பித்து வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் முகம் சுழித்ததோடு, ஹெட் ஆபாச சைகை செய்ததாக குற்றம்சாட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. போட்டிக்கு பிறகு டிராவிஸ் ஹெட் சைகை குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "அய்யோ, மன்னித்து விடுங்கள். சரி, என்னால் அதற்கு விளக்கம் அளிக்க முடியும். அவரது கைவிரல் மிகவும் சூடாக இருந்தது, இதனால் அவர் அதனை ஐஸ் நிறைந்த கப்-இல் வைக்கிறார். அது சாதார நகைச்சுவை தான்."

"காபாவாக இருந்தாலும், வேறு எங்காவது இருந்தாலும், விக்கெட் வீழ்ந்ததும் அவர் ஐஸ் பக்கெட்டில் தனது கைவிரல்களை வைத்துவிடுவார். அதுபோல் தான், அவர் அது மிகவும் நகைப்பான ஒன்றாக நினைக்கிறார். இது மட்டும் தான், வேறு எதுவும் அதில் இல்லை," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News