முத்தரப்பு தொடர்: தென் ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
- முதலில் விளையாடிய நியூசிலாந்து 173 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 152 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் ராபின்சன் 75 ரன்களும் பெவோன் ஜேக்கப்ஸ் 44 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் க்வேனா மபாகா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 18.3 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது.