கிரிக்கெட் (Cricket)
null

வீடியோ: படகு விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலியின் சகோதரர்

Published On 2025-05-26 20:17 IST   |   Update On 2025-05-26 21:52:00 IST
  • கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா ஆகியோர் படகு சாகசத்தில் ஈடுபட்டனர்.
  • அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி. அவரது மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி ஆகியோர் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஒரு படகு சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அர்பிதா கங்குலி ஆகியோர் கடல் நீரில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. இதனால் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.

உடனடியாக அங்கிருந்த லைஃப் கார்டுகள் விரைந்து செயல்பட்டு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஸ்னேஹாசிஷ் மற்றும் அர்பிதா உட்பட அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News