கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து

Published On 2025-10-15 23:23 IST   |   Update On 2025-10-15 23:23:00 IST
  • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
  • முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவரில் 133 ரன்கள் எடுத்தது.

கொழும்பு:

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொழும்புவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் வெற்றி பெற 113 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி 6.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News