கிரிக்கெட் (Cricket)
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேமரூன் கிரீன் விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
- கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரர்களாக மார்னஸ் லெபுசென் இடம் பெற்றுள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜாம்பா, ஜோஷ் இங்லீஷ் இருவரும் விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலிப்ஸ், மேத்யூ குனேமான் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.