சாம்பியன்ஸ் டிராபி: ஆட்ட நாயகன் ரோகித் சர்மா, தொடர் நாயகன் ரச்சின் ரவீந்திரா
- இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து வென்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
- 76 ரன் எடுத்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். கில் 31 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 48 ரன்னும், அக்சர் பட்டேல் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 34 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவினார்.
இறுதியில், இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.