null
ஐசிசி தரவரிசை: தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்த் முதலிடம் பிடித்தார்
- மகளிர் உலக கோப்பையில் 2 சதங்களுடன் 571 ரன்கள் குவித்தார்.
- ஸ்மிரிதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார். இதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறியுள்ளார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். லாரா வால்வார்த் 814 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார். ஸ்மிரிதி மந்தனா 811 புள்ளிகள் பெற்றுள்ளார்.
உலக கோப்பையில் ஸ்மிரிதி மந்தனா 9 போட்டிகளில் 1 சதம், 2 அரைசதங்களடன் 434 ரன்கள் விளாசியிருந்தார்.