கிரிக்கெட் (Cricket)

ENGvsIND 4th Test: சுனில் கவாஸ்கர் சாதனையை சமன்செய்த கே.எல்.ராகுல்

Published On 2025-07-23 20:06 IST   |   Update On 2025-07-23 20:06:00 IST
  • கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும் அவுட்டாகினர்.
  • கவாஸ்கரின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

மான்செஸ்டர்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது..

அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 49.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதாவது, வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த 2வது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்குமுன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது அவரது சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

Tags:    

Similar News