கிரிக்கெட் (Cricket)
null

2024 ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக ஜஸ்பிரித் பும்ரா அறிவிப்பு

Published On 2024-12-31 11:50 IST   |   Update On 2024-12-31 11:59:00 IST
  • ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • அதிக ரன்களை அடித்த இந்திய துவக்க வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர், நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவருமான ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆண்டு டாப் கிளாஸ் ஃபார்மில் முடித்துக் கொள்கிறார். இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ்-இன் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதோடு, அணியிலும் இடம்பெறவில்லை.

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த இந்திய துவக்க வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இடம்பெறவில்லை. இவர்களுக்கு மாற்றாக அலெக்ஸ் கேரி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஹோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 


2024 ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியல்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)

பென் டக்கெட் (இங்கிலாந்து)

ஜோ ரூட் (இங்கிலாந்து)

ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)

ஹேரி புரூக் (இங்கிலாந்து)

கமிந்து மெண்டிஸ் (இலங்கை)

அலெக்ஸ் கேரி - விக்கெட் கீப்பர் (ஆஸ்திரேலியா)

மேட் ஹென்ரி (நியூசிலாந்து)

ஜஸ்பிரித் பும்ரா - கேப்டன் (இந்தியா)

ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)

கேஷவ் மகாராஜ் (தென் ஆப்பிரிக்கா)

Tags:    

Similar News