ஐ.பி.எல்.(IPL)

பைக்கில் பயணம் செய்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் - வீடியோ வைரல்

Published On 2025-03-31 09:41 IST   |   Update On 2025-03-31 09:41:00 IST
  • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் குவித்தார்.
  • நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது.

ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழந்து 232 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட முதல்போட்டியிலேயே ஷ்ரேயாஸ் அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.

நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஒரு நபருடன் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக்கை ஓட்டுபவர் இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News