ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: சென்னையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ராஜஸ்தான்

Published On 2025-05-20 23:08 IST   |   Update On 2025-05-20 23:08:00 IST
  • டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது.

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 20 பந்தில் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 39 ரன்னில் அவுட் ஆனார்.

ராஜஸ்தான் சார்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 19 பந்தில் 33 ரன் எடுத்து அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 33 பந்தில் 57 ரன்னும், சஞ்சு சாம்சன் 41 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜுரெல் 12 பந்தில் 31 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.

Tags:    

Similar News