ஐ.பி.எல்.(IPL)

வீட்டுல எலி, வெளிய புலி... AWAY கிரவுண்டில் வெற்றி பெற்று HOME கிரவுண்டில் தொடர்ந்து தோற்கும் RCB

Published On 2025-04-19 06:36 IST   |   Update On 2025-04-19 06:36:00 IST
  • AWAY கிரவுண்டில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
  • சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்துள்ளது.

ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெறும் 5-வது வெற்றி இதுவாகும். பெங்களூரு அணி பெற்ற 3-வது தோல்வி இதுவாகும்.

குறிப்பாக AWAY கிரவுண்டில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி அவர்களின் HOME கிரவுண்டான சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 4 ஆம் இடத்தில இருந்தாலும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி தொடர்ந்து தோற்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News