ஐ.பி.எல்.(IPL)

டிம் டேவிட் அரை சதம்: பஞ்சாப் வெற்றி பெற 96 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

Published On 2025-04-18 23:06 IST   |   Update On 2025-04-18 23:10:00 IST
  • மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
  • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பெங்களூரு:

ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

சுமார் 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்தன.

கேப்டன் ரஜத் படிதார் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் போராடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 3 சிக்சர் விளாசினார்.

இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 95 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் யான்சேன், சஹல், அர்ஷ்தீப் சிங், பிரார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News