ஐ.பி.எல்.(IPL)
11 ஆண்டுக்கு பிறகு பிளேஆப் சுற்றுக்கு சென்று அசத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி
- 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது
- தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது
நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இதன்மூலம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது. 11 ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது
பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.