ஐ.பி.எல்.(IPL)

ரவி பிஷ்னோய் பந்து வீசாமல் இருந்ததற்கு தோனிதான் காரணம்- உண்மையை உடைத்த ஷிவம் துபே

Published On 2025-04-16 16:31 IST   |   Update On 2025-04-16 16:31:00 IST
  • ரவி பிஷ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
  • அவருக்கு ரிஷப் பண்ட் வாய்ப்பு வழங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார்.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 14-ம் தேதி லக்னோ- சென்னை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் கேப்டன் தோனி 26 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

இந்த போட்டியில் டெத் ஓவரில் ரவி பிஷ்னோயை பயன்படுத்தாதது தான் லக்னோவின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்தனர்.

அந்தப் போட்டியில் ரவி பிஸ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அவருக்கு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டெத் ஓவரில் வாய்ப்பு வழங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார். 

இந்நிலையில் நீ கடைசி வரை பேட்டிங் செய்தால் ரவி பிஷ்னோய் பவுலிங் செய்ய வரமாட்டார் என்று தோனி கூறியதாக துபே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மஹி பாய் சில விஷயங்களை என்னிடம் சொன்னார். குறிப்பாக பிஸ்னோய்க்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. எனவே நீ கடைசி வரை விளையாடினால் பிஷ்னோய் பந்து வீச வர மாட்டார் என்று தோனி என்னிடம் சொன்னார். மறுபுறம் தோனி வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அதைப் பயன்படுத்தி நான் விளையாடினேன்.

என்று துபே கூறினார். 

Tags:    

Similar News