null
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர் யார் தெரியுமா?- 6ஆவது இடத்தில் சுனில் நரைன்
- சிஎஸ்கே-வுக்கு எதிராக 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
- பேட்டிங்கில் 18 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 25ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் டைர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சுனில் நரைன், பேட்டிங்கில் 18 பந்தில் 44 ரன்கள் விளாசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது அவரின் 16ஆவது ஆட்ட நாயகன் விருதாகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஏபிடி வில்லியர்ஸ் 25 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 22 முறை வென்றுள்ளார். ரோகித் சர்மா 19 முறையும், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் 18 முறையும், எம்.எஸ். தோனி 17 முறையும் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர்.
சுனில் நரைன், ஜடேஜா, ஷேன் வாட்சன், யுசுப் பதான் ஆகியோர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.
கே.எல். ராகுல், ரசல் 15 முறையும், ரெய்ானா, பொல்லார்டு 14 முறையும், பட்லர், கம்பீர், ரகானே 13 முறையும் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.