ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

Published On 2025-05-01 19:07 IST   |   Update On 2025-05-01 19:07:00 IST
  • மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
  • இன்று ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தால் அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும்.

18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டது.

ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 210 ரன் இலக்கை 14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதத்தால் 15.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.

அதனால் இன்றைய ஆட்டத்திலும் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் ரேசில் முன்னணியில் உள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றிபெற மும்பை அணி முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் ராஜஸ்தான் அணி அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும்.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

Tags:    

Similar News