ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: ரோகித், ரிக்கல்டன் அரைசதம் - ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை

Published On 2025-05-01 21:21 IST   |   Update On 2025-05-01 21:21:00 IST
  • நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது.
  • அதிரடியாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.

18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - ரிக்கல்டன் களம் இறங்கினர்.

நிதானமாக விளையாடிய ரோகித் - ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோகித் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அடுத்ததாக சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பாண்ட்யா, சூரியகுமார் ஆகியோர் தலா 48 ரன்கள் அடித்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் பராக், தீக்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News