ஐ.பி.எல்.(IPL)
IPL 2025: டிவால்ட் பிரேவிஸ் அதிரடி - குஜராத் அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை
- அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஆயுஷ் மாத்ரே - கான்வே களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக களமிறங்கிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கான்வே அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டிவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.