ஐ.பி.எல்.(IPL)
ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சந்தீப் சர்மா விலகல்
- சந்தீப் சர்மா இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்விகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்த சந்தீப் சர்மா கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்தீப் சர்மா இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி வெறும் 9 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மாவுக்கு பதில் ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்தது.