ரிஷப் பண்ட் தடுமாற இதுதான் காரணம்- கில்கிறிஸ்ட் விளக்கம்
- அவர் எப்போதுமே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக நீங்கள் உணர்வீர்கள்.
- ஆனால் இம்முறை அவர் அப்படி இருப்பது போல் தெரியவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தடுமாறி வருகிறார். லக்னோ அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்விகளை சந்தித்துள்ளது.
இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் 27 கோடிக்காக வாங்கப்பட்டதால் கட்டாயம் அசத்த வேண்டும் என்ற அழுத்தமே ரிஷப் பண்ட் திறமை இருந்தும் தடுமாற்றக் காரணம் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் விளையாடுவதைப் பார்க்கும் போது அவர் எப்போதுமே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இம்முறை அவர் அப்படி இருப்பது போல் தெரியவில்லை. அவர் சிரித்து, மகிழ்ந்து, ரிலாக்ஸாக, மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடியவில்லை.
ஒருவேளை அது கேப்டன்ஷிப் பொறுப்பால் இருக்கலாம். புதிய அணிக்கு உச்சபட்ச சம்பளத் தொகையுடன் வந்துள்ளதும் காரணமாக இருக்கலாம். அவர் தன்னுடைய உண்மையான குண நலனை வெளிப்படுத்துவதாகவும் தெரியவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஸ்பார்க் இருப்பதைப் பார்க்க முடியவில்லை. இயற்கையாகவே அவர் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களைப் பொழுது போக்கக்கூடியவர். இயற்கையாகவே துடிப்பான பாடி லாங்குவேஜ் கொண்டவர். இருப்பினும் கடந்த 10 - 11 போட்டிகளாகவே அவரை பார்த்து வருகிறேன். அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது.
என்று கில்கிறிஸ்ட் கூறினார்.