IPL 2025: திக்வேஷ் ரதியிடம் வாக்குவாதம் செய்த அபிஷேக் சர்மா - வைரல் வீடியோ
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.
இதனையடுத்து திக்வேஷ் ரதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது திக்வேஷ் ரதி அவரை பார்த்து கோவமாக கையை வீசி பின்னர் தனது சிக்னேச்சர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அபிஷேக் சர்மா களத்திலேயே அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.