ஐ.பி.எல்.(IPL)

பிளேஆப் ரேசில் இருந்து வெளியேறிய சி.எஸ்.கே, ராஜஸ்தான், ஐதராபாத்- முதல் 4 இடத்துக்கு 7 அணிகள் போட்டி

Published On 2025-05-06 13:03 IST   |   Update On 2025-05-06 13:03:00 IST
  • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும்.
  • பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரில் நேற்றுடன் 55 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதுவரை எந்த அணியும் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இன்னும் 15 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தன. தற்போது பிளே ஆப் சுற்றின் 4 இடங்களுக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன.

இதில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும். பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி ஆகிய அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆர்.சி.பி.க்கு இன்னும் 3 போட்டிகள் (லக்னோ, ஐதராபாத், கொல்கத்தா) உள்ளது. இதில் 2 ஆட்டம் சொந்த மண்ணில் நடக்கிறது. இதில் ஒன்றில் வென்றாலே தகுதி பெற்று விடும். முதல் 2 இடத்தை பிடிப்பதை அந்த அணியின் இலக்காக உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்: 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளுடன் விளையாட வேண்டும். 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும். ஒன்றில் வென்றால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து பிளே ஆப் வாய்ப்பு அமையும்.

மும்பை இந்தியன்ஸ்: 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் (குஜராத், பஞ்சாப், டெல்லி) எஞ்சியுள்ளது. இதில் 2 ஆட்டம் உள்ளூரில் இருக்கிறது. ரன் ரேட்டில் வலுவாக உள்ள அந்த அணி தொடர்ச்சியாக 6 போட்டி யில் வெற்றி பெற்றது. 2 வெற்றி பெற்றால் தகுதி பெற்றுவிடும். முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.

குஜராத் டைட்ன்ஸ்: குஜராத் அணிக்கு 4 ஆட்டம் உள்ளது. மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை அணிகளிடம் மோத வேண்டும். இதில் 2 போட்டிகள் உள்ளூ ரில் நடக்கிறது. 14 புள்ளிகளு டன் 4-வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக ரன்ரேட்டில் நன்றாக இருக்கிறது. 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெறும். முதல் 2 இடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.4 போட்டிகளில் தோற்றதால் வெளியேறும்.

டெல்லி கேபிடல்ஸ்: 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப், குஜராத், மும்பை அணிகளுடன் மோத வேண்டும். தொடக்கத்தில் முன்னேறி இருந்த அந்த அணிக்கு தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்துடன் தோற்க வேண்டிய நேற்றைய ஆட்டத்தில் அதிர்ஷ்ட வசமாக ஒரு புள்ளி கிடைத்தது. கடைசி 5 ஆட்டத்தில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றது. எஞ்சிய ஆட்டங்களில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அணி உள்ளது. 17 புள்ளிகள் வரை பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் இருக்கிறது. மூன்றிலும் வெற்றியை பெற்றால் மட்டுமே வாய்ப்பில் இருக்க இயலும். அதே சமயம் மற்ற முடிவுகள், ரன் ரேட்டை பொறுத்தே இருக்கிறது. முன்னறுவதற்கான வாய்ப்பு குறைவே.

லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்: 10 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ள பெங்களூரு குஜராத், ஐதராபாத் அணிகளுடன் மோத வேண்டும். 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் அந்த அணியின் ரன்ரேட் மோசமாக இருக்கிறது ஒரு ஆட்டத்தில் தோற்றால் வெளியேறி விடும்.

Tags:    

Similar News