ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகள்: மோசமான சாதனை படைத்த சி.எஸ்.கே.
- முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய கொல்கத்தா 10.1 ஓவரில் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
இதேபோல், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 முறை தோற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.