IPL வரலாற்றில் முதல்முறையாக... மோசமான சாதனை படைத்த சி.எஸ்.கே. அணி
- 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி
- புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துடன் சி.எஸ்.கே. அணி இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
குஜராத் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துடன் சி.எஸ்.கே. அணி இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.
இதற்குமுன் ஐபிஎல் வரலாற்றில் கடைசி இடத்தில் சென்னை அணி நிறைவு செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.