ஐ.பி.எல்.(IPL)

பெங்களூரு கூட்ட நெரிசல்: விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்

Published On 2025-06-07 04:30 IST   |   Update On 2025-06-07 04:30:00 IST
  • உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.
  • கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு:

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல் மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர். இந்த விவகாரத்தில், முன்பே பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். உடன் சேர்த்து, விசாரணை நடத்த பரிசீலனை செய்யப்படும் என வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News