30-வது 'லீக்' ஆட்டம்: சென்னை- லக்னோ நாளை மோதல்
- லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
- லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரின் 30-வது ஆட்டமாகும்.
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் 27 லீக் ஆட்டங்கள் முடிந்தன.
ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 5-ல் தோற்றது. 2 புள்ளி களுடன் கடைசி இடத்தில் உள்ளது
சேப்பாக்கம் மைதா னத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற் கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி.யிடம் (சேப்பாக்கம்) 50 ரன்னிலும், ராஜஸ்தானிடம் (கவுகாத்தி) 6 ரன்னிலும், டெல்லி கேப்பிட்டல்சிடம் ( சேப்பாக்கம்) 25 ரன்னிலும், பஞ்சாப்பிடம் (நியூ சண்டி கர்) 18 ரன்னிலும், கொல் கத்தாவிடம் (சேப்பாக்கம்) 8 விக்கெட் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக தோற்றது.
லக்னோவுடன் நாளை மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரின் 30-வது ஆட்டமாகும்.
தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்கே. அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமானது. 2-வது வெற்றிக்காக நீண்ட நாட் களாக காத்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாக இருக்கிறது. டோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு சேப்பாக்கத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 103 ரன்னில் சுருண்டு மிகவும் பரிதாபமாக தோற்றது.
எஞ்சி இருக்கும் 8 போட்டியில் 7-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும். இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே ஏனென் றால் சி.எஸ்.கே. வீரர்கள் ஆட்டம் படுகேவலமாக இருக்கிறது.
ரிஷப்பண்ட் தலைமை யிலான லக்னோ 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றி ஆர்வத்தில் இருக் கிறது.
நிக்கோலஸ் பூரன், மிச்சேல் மார்ஷ், மர்சிராம், திக்வேஷ், ரவி பிஷ்னோய் லக்னோ அணியில் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.