ஐபிஎல் 2026: மினி ஏலம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்
- வீரர்கள் ஏலப்பட்டியலில் முதல் கட்டமாக 1,355 பேர் இடம் பெற்று இருந்தனர்
- 35 வீரர்கள் புதிதாக ஏலத்தில் இடம் பெற்று உள்ளன.
மும்பை:
ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலம் வருகிற 16-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது. இந்த ஏலம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். 10 அணிகளும் 77 வீரர்களை ஏலத்தில் எடுக்க இயலும்.
வீரர்கள் ஏலப்பட்டியலில் முதல் கட்டமாக 1,355 பேர் இடம் பெற்று இருந்தனர். தற்போது வெளியான இறுதிப் பட்டியலில் 350 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். 1005 வீரர்கள் ஏலப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 350 வீரர்களில் 224 விளையாடத இந்தியர்களும் 16 ஏற்கனவே விளையாடிய இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் குயின்டன் டீ காக் உள்பட 35 வீரர்கள் புதிதாக ஏலத்தில் இடம் பெற்று உள்ளன. குயின்டன் டீ காக்கிற்கான அடிப்படை விலை ரூ.1 கோடியாகும்.
கேமரூன் கிரீன், லிவிஸ்டன், பிஷ்னோய், வெங்கடேஷ் அய்யர் உள்பட 45 வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.