கிரிக்கெட் (Cricket)

திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்..!

Published On 2025-07-10 19:57 IST   |   Update On 2025-07-10 19:57:00 IST
  • கைவிரலில் பந்து தாக்கியதால் வலி நிவாரண ஸ்பிரே அடிக்கப்பட்டது.
  • இருந்தபோதிலும் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ஸில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க விக்கெட்டுகளை நிதிஷ் ரெட்டி வீழ்த்தினார். அதன்பின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள்.

தொடக்கத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனது. இதனால் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் பந்துகளை அடிக்கடி டைவ் அடித்து பிடித்தார். ஒரு கட்டத்தில் பந்தை பிடிக்கும்போது, அவரது கைவிரில் காயம் ஏற்பட்டது. வலி ஏற்படமால் இருக்க பிசியோ அவருக்கு வலி நிவாரணை ஸ்பிரே அடித்தார். என்றபோதிலும் 35 ஓவர் தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இதனால் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்கிறார். ரிஷப் பண்ட்-க்கு கவலை அளிக்கும் வகையில் காயம் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிச்சயம் பேட்டிங் செய்வார் என நம்பப்படுகிறது.

Tags:    

Similar News