தொடர்ச்சியாக 20-வது முறை டாஸை இழந்த இந்தியா- கடைசியாக டாஸ் வென்ற வீடியோ வைரல்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் தோற்றது.
- 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 20-வது முறை டாஸ் தோற்றுள்ளது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றது. அன்று முதல் தற்போது வரை இந்திய அணி டாஸ் தோல்வி தொடர்ந்து வருகிறது. கடைசியாக 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.