null
கடுங் குளிரிலும் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி.. பிசிசிஐ வெளியிட்ட வீடியோ வைரல்
- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
- ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள்கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி நாளை கான்பெராவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் முதல் டி20 போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அங்கு பனிபொழிவு அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர்.
இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.