எதிர்காலத்தில் இந்திய பெண்கள் அணியை வெல்ல மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸ்திரேலியா வீராங்கனை
- இந்திய பெண்கள் அணி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
- அடுத்த ஐந்து பத்தாண்டுகளில் தோற்கடிக்க மிகவும் கடினமான அணியாக இருக்கப் போகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும், இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியா அணியில் ஆஷ்லே கார்ட்னெர் இடம் பிடித்திருந்தார். இவர் வருகிற 9-ந்தேதி தொடங்கும் பெண்கள் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறது.
இவர் இந்திய பெண்கள் அணியை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்திய அணி குறித்து ஆஷ்லே கார்ட்னெர் கூறியதாவது:-
இந்திய பெண்கள் அணி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்து பத்தாண்டுகளில் தோற்கடிக்க மிகவும் கடினமான அணியாக இருக்கப் போகிறது.
இது ஒரு உற்சாகமான வாய்ப்பு. ஒரு ஆஸ்திரேலியராக இது சற்று பயமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த விளையாட்டு இவ்வளவு விரைவாகவும் வேகமாகவும் வளர்ந்து வருகிறது என்பதை அறிவது பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது.
உலகக் கோப்பைக்குப் பிறகு ஊடகங்களில் நான் கூறியிருக்கிறேன். மேலும் நாங்கள் இன்னும் உலகின் சிறந்த அணி என்று நான் கருதுவதை நான் மறுக்கவில்லை. உலக கோப்பைகள் உயர் நெருக்கடி தருணங்களில் உங்கள் வெற்றியை வெளிப்படுத்துகின்றன.
இவ்வாறு ஆஷ்லே கார்ட்னெர் தெரிவித்தார்.