கிரிக்கெட் (Cricket)

தோத்துட்டே இருக்கீங்களே டா.. ஆடவர் அணி 17 முறை.. மகளிர் அணி 6 முறை.. டாஸில் தொடரும் சோகம்

Published On 2025-10-23 16:08 IST   |   Update On 2025-10-23 16:08:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய ஆடவர் அணி டாஸை இழந்தது.
  • மகளிர் உலக கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக மகளிர் அணி டாஸை இழந்தது.

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் டாஸை இழந்ததன் மூலம் இந்திய அணி கடைசியாக விளையாடிய 17 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒருமுறை கூட டாஸ் ஜெயிக்கவில்லை.

கடைசியாக நடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தது.

இதேபோல மராட்டியத்தின் நவி மும்பை நகரில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் டாஸை இந்திய அணி தோற்றதன் மூலம் உலக கோப்பை தொடரில் 6 போட்டியிலும் டாஸை இழந்துள்ளது.

ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

Tags:    

Similar News