தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: முதல்நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்தியா
- ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்திருந்த போது யான்சன் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்திருந்த போது யான்சன் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதனை தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.