கிரிக்கெட் (Cricket)

குணமடைந்து வருகிறேன்... உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி - ஷ்ரேயாஸ் உருக்கமான பதிவு

Published On 2025-10-30 10:22 IST   |   Update On 2025-10-30 10:22:00 IST
  • இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
  • தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் குணமடைந்து வருவதாக ஷ்ரேயாஸ் ஐயர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் தற்போது குணமடைந்து வருகிறேன். எனக்குக் கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துக்களையும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது உண்மையிலேயே நிறைய அர்த்தம் தருகிறது. என்னை உங்கள் நினைவுகளில் வைத்திருந்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுளளார்.

Tags:    

Similar News