கிரிக்கெட் (Cricket)
null

ஹர்திக் பாண்ட்யா தனது காதலியுடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Published On 2025-11-19 19:42 IST   |   Update On 2025-11-19 19:42:00 IST
  • ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர்
  • ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News