உங்களது பேஸ் பால் ஆட்டம் எங்கே?: இங்கிலாந்து வீரர்களை கிண்டலடித்த இந்திய வீரர்கள்
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடி வருகிறது.
எப்போதும் பேஸ் பால் என்ற பெயரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இந்த முறை பொறுமையாக ஆடி வருகிறது. இதனால் இங்கிலாந்து அணியினரை இந்திய வீரர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீசும்போது இந்திய கேப்டன் சுப்மன் கில், இனி பொழுதுபோக்கு கிரிக்கெட் இல்லை. போரடிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வாங்க, பாய்ஸ் என இங்கிலாந்து அணியினரை கிண்டலடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல், சிராஜ் ரூட்டுக்கு எதிராக பந்து வீசுகையில் அவரை நோக்கி, பேஸ், பேஸ்பால். இப்போது பேஸ்பால் விளையாடுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன் என கிண்டலடித்தார்.
தற்போது வரை இங்கிலாந்து அணி 68 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.