கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு சுப்மன் கில் ரெடி?

Published On 2025-12-03 14:50 IST   |   Update On 2025-12-03 14:50:00 IST
  • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதியுடன் முடிவடைகிறது.
  • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடர் டிசம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News