கிரிக்கெட் (Cricket)

ஆடுகளம் குறித்து விமர்சனம்: கவுதம் கம்பீர் சொல்வது என்ன?

Published On 2025-11-16 17:48 IST   |   Update On 2025-11-16 17:48:00 IST
  • நாங்கள் எதிர்பார்த்த ஆடுகளம் இதுதான்.
  • நான் முன்னதாக சொன்னதுபோன்று, ஆடுகள பராமரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நான்கு இன்னிங்சிலும் பவுமா மட்டுமே அரைசதம் அடித்தார். இந்தியா முதல் இன்னிங்சில் அடித்த 189 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

முதல் நாளில் இருந்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் சாதமாக இருந்தது. அதிக அளவில் டர்ன் ஆனது. பந்து பிட்ச் ஆன சில பகுதிகளில் பள்ளம் ஏற்படுவபோன்று, மேற்பகுதி சேதமாகியது. இதனால் மோசமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் கவுதம் கம்பீர் ஆடுகளம் குறித்து கூறுகையில் "ஆடுகளம் அவ்வளவு மோசமான வகையில் சேதமடையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த ஆடுகளம் இதுதான். நான் முன்னதாக சொன்னதுபோன்று, ஆடுகள பராமரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார். நாங்கள் என்ன விரும்பினோமோ, அது கிடைத்தது. நன்றாக விளையாடாதபோது, இதுதான் நடக்கும்" என்றார்.

Tags:    

Similar News