இந்தியாவுக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
- இங்கிலாந்து தரப்பில் பட்லர் 45 ரன்கள் எடுத்தார்.
- இந்திய தரப்பில் அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் - பென் டக்கெட் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே சால்ட் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் டக்கெட் 3 ரன்னில் ஆட்டழிழந்தார்.
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பவர்பிளேயில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் அதிரடியாக விளையாடினார். இதனால் இங்கிலாந்து அணி பவர்பிளேயில் 58 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி புரூக் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பட்லர் 45 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 13, ஸ்மித் 22, ஓவர்டேன் 5 என ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் இழந்த நிலையில் மறுபக்கம் பிரைடன் கார்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.