கிரிக்கெட் (Cricket)

பும்ராவை காயப்படுத்த வேண்டும் என்பதுதான் ஸ்டோக்ஸ், ஆர்ச்சரின் திட்டமாக இருந்தது: முகமது கைஃப் குற்றச்சாட்டு

Published On 2025-07-17 13:11 IST   |   Update On 2025-07-17 13:11:00 IST
  • லார்ட்ஸ் டெஸ்டில் பும்ராவுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்சர் வீசினர்.
  • காயப்படுத்த வேண்டு என்ற திட்டத்தில் அவ்வாறு பந்து வீசினர் என கைஃப் குற்றச்சாட்டு.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா 112 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்தது. பும்ரா 54 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் எடுத்தார்.

பும்ரா பேட்டிங் செய்யும்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தொடர்ச்சியாக பவுன்சர் வீசி பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கைஃப் கூறுகையில் "பும்ராவுக்கு எதிராக பவுன்சர் வீச வேண்டும் என்பது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரின் திட்டம். பும்ரா அவுட்டாகவில்லை என்றால் கைவிரல் அல்லது தோள்பட்டையை காயப்படுத்த வேண்டும். அவர்கள் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் முக்கியமான பந்து வீச்சாளரை காயப்படுத்த இதுதான் பந்து வீச்சாளர்கள் மனநிலையில் நிலைத்திருக்கும். இந்த திட்டம் பின்னர் அவர்களுக்கு வேலை செய்தது. பும்ரா ஆட்டமிழந்தார்.

இவ்வாறு பும்ரா தெரிவித்தார்.

Tags:    

Similar News