கிரிக்கெட் (Cricket)
null

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து Dream11 விலக திட்டம்!

Published On 2025-08-24 11:00 IST   |   Update On 2025-08-24 14:07:00 IST
  • Dream 11 பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
  • ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், புதிய ஆன்லைன் விளையாட்டுகள் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிதி சார்ந்த நிறுவனங் களான ஜெரோகா, ஏஞ்சல் ஒன், குரோவ், ஆட்டோ மொபைல், எப்.எம்.சி.ஜி. செக்டார், ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்ற நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டியில் உள்ளன.

Tags:    

Similar News